பாஜகவைச் சேர்ந்த சின்னத்திரை நடிகை மீது பரபரப்பு புகார்..! என்ன நடக்கிறது?

பாஜகவைச் சேர்ந்த பி. ஜெயலட்சுமி உள்ளிட்டோர் மீது சென்னையை சேர்ந்த பெண் கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார்.

சின்னத்திரை நடிகையான ஜெயலட்சுமி அண்மையில் பாஜகவில் இணைந்து கட்சி செயல்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இவர் மீதும் சில வழக்கறிஞர்கள் மீதும் சென்னை பாடியைச் சேர்ந்த கீதா என்ற பெண் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் கூறியுள்ளதாவது, என் பெயர் கீதா. எனது கணவர் ஒன்றரை வருடத்திற்கு முன்பு இறந்துவிட்டார். நானும் சில பெண்கள் சேர்ந்து செம்பருத்தி என்ற பெண்கள் சுயகுழு நடத்தி வருகிறோம்.

இந்த சூழ்நிலையில் நடிகையும் பாஜகவைச் சேர்ந்த பி. ஜெயலட்சுமி, அவருடைய மகள் அனகா மற்றும் வழக்கறிஞர் சார்லஸ், அலெக்ஸ்சாண்டர் ஆகியோர் சேர்ந்து கொண்டு, எண்கள் மகளிர் சுயஉதவிக்குழு இக்கட்டான சூழ்நிலையை அவர்களுக்கு சாதகமாக ஆக்கிக்கொண்டு குழுவில் உள்ள உறுப்பினர் வங்கி கணக்கிலும் கொடுத்த தொகைக்கு பத்து பைசா என்ற வட்டியை எடுத்துக்கொண்டு மீதி தொகையை வங்கியில் செலுத்தினார்கள். மேலும், அதற்காக ஒவ்வொரு நபர்களிடம் இருந்து அவரவர் வங்கி காசோலைகளை ஜாமினாக பெற்று வட்டிக்கு கொடுத்தனர்.

நாங்களும் மாதம் மாதம் பணம் செலுத்தினோம். தற்போது நாங்கள் கொடுத்த தொகைகளை வட்டி என்று கூறியும் அசல் கொடுக்கவில்லை என்று கூறினார்கள்.

மேலும், ஜெயலட்சுமி, அனகா மற்றும் சார்லஸ் ஆகிய மூவரும் சேர்ந்துகொண்டு எங்கள் வீட்டுக்கு வந்து எங்களையும், எங்கள் வீட்டாரையும் கூண்டோடு அழித்து விடுவோம் என்று மிரட்டுவதாகவும் மேலும், புகார் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டி அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us