கௌதம் மேனன்- ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படம்… மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

 

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கௌதம் மேனன் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வருகிறார். சிம்பு கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கௌதம் மேனன் பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறன் எழுதி இயக்கியுள்ள படத்தில் ஜி.வி.பிரகாஷ், கௌதம் மேனன் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் வர்ஷா பொல்லம்மா கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் விஜய் டிவி பிரபலம் டைகர் தங்கதுரை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் வழங்கும் இந்த படத்தை டி.ஜி. பிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ‘செல்ஃபி’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Contact Us