“தடுப்பூசி கடவுசீட்டு திட்டத்திலிருந்து பின்வாங்கிய பிரிட்டன்!”.. சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்..!!

 

பிரிட்டனில் 16 வயதுக்கு அதிகமான நபர்களில் 80%-க்கும் மேற்பட்டோருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் அளிக்கப்பட்டிருக்கிறது. அதனையடுத்து 12 லிருந்து 15 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசியளிப்பது தொடர்பில் விரைவாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, குளிர்காலங்களில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக, இனிமேல் தடுப்பூசி பாஸ்போர்ட் கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது, திரையரங்குகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் இரவு விடுதிகள் போன்ற மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களுக்கு செல்வதற்கு 16 வயதுக்கு அதிகமான நபர்கள், தடுப்பூசி பாஸ்போர்ட் கட்டாயம் வைத்திருக்கவேண்டும் என்ற புதிய விதிமுறையை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சுகாதார அமைச்சரான சஜித் ஜாவித், தடுப்பூசி கடவுச்சீட்டுக்களை காண்பிக்கும் திட்டத்தை அரசு கைவிட்டுவிட்டதாக கூறியிருக்கிறார். தற்போது இருக்கும் சூழலில் அரசு இத்திட்டத்தை முக்கியமானதாக கருதவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

Contact Us