காரை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்த 2 பெண்களும் 2 ஆண்களும்… தடுத்து நிறுத்த பொலிசார் செய்த செயல்

 

கனடாவில் கார் ஒன்றைத் திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்த ஒரு கும்பலை பிடிக்க படாத பாடு பட்டார்கள் பொலிசார். நேற்று அதிகாலை 2 மணிக்கு Saskatoonஇல் கார் ஒன்றைத் திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்த ஒரு கும்பலை பொலிசார் துரத்தியும் அவர்களை நிறுத்த முடியவில்லை.

பிறகு, சாலையில் கூர்மையான ஆணி போன்ற கருவிகளைப் போட்டு காரை நிறுத்தவைத்தனர் பொலிசார். அப்போது காரிலிருந்து இறங்கிய அந்த கும்பல் ஓட்டம் பிடித்துள்ளது

கடைசியாக வேறு வழியில்லாமல் மோப்ப நாய்களை விட்டுத் துரத்த, நாய்களிடம் சிக்கியது அந்த கும்பல். அந்த கும்பலில் 26 வயது பெண் ஒருவர், 19 வயது பெண் ஒருவர் மற்றும் 35 வயது ஆண்கள் இருவர் இருந்தனர்.

ஒரு பெண்ணை பொலிஸ் நாய் குதறியதால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

நால்வரையும் கைது செய்துள்ள பொலிசார், அவர்கள் மீது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியது, 5,000 டொலர்களுக்கு அதிகமாக பணம் வைத்திருந்தது, பொலிசார் நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாமல் வாகனத்தைச் செலுத்தியது முதலான பல குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

Contact Us