“காரை நிறுத்துங்கடா ,கதவை திறங்கடா…” -ஓடிய காரில் வாலிபர்களால் அலறிய பெண்

 

ஓடும் காரில் காதலியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீஸ் தேடி வருகிறது உத்தரபிரதேசத்தில் கான்பூரில் உள்ள சாகேரி பகுதியில் வசிக்கும் ஒரு 25 வயதான பெண் அங்கு வேலை பார்த்து வருகிறார் . லக்னோவைச் சேர்ந்த அந்த பெண் கான்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் நவாப்கஞ்சில் ஒரு வாடகை விடுதியில் வசிக்கிறார் .

சில மாதங்களுக்கு முன்பு, அவர் ஒரு பொதுவான நண்பர் மூலம் ஒரு இளைஞரை சந்தித்தார் .பின்னர் அந்த வாலிபரை காதலித்தார் .பிறகு அந்தப் பெண்ணும் அவரும் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினர்,.சமீபத்தில், அந்த பெண்ணுக்கு தன்னுடைய காதலன் வேறொரு பெண்ணை காதலிக்கும் விஷயம் சிலர் மூலம் தெரிய வந்தது .அதனால் அவர் அந்த காதலனுடன் பேசுவதை நிறுத்தி கொண்டார் .இதனால் அந்த காதலன் அந்த பெண் மீது கடும் கோபம் கொண்டு அவரை பலமுறை சந்திக்க முயன்று தோல்வியுற்றார்

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை, அந்த காதலன் ஒரு நண்பர் மூலம் , அந்த பெண்ணை காரில் சந்திக்க விரும்புவதாக கூறினார். அதை நம்பி அந்த பெண் காதலனின் காரில் அமர்ந்தவுடன் ​​அவர் கதவைப் பூட்டினார்.
பின்னர் காரிலிருந்த இரு வாலிபர்கள் அந்த பெண்ணை ஓடும் காரில் அடித்து ,உதைத்து ,பாலியல் கொடுமை செய்தனர் .இதனால் அந்த பெண் சத்தம் போட்டு கத்தினார் .அதன் பிறகு அவர்கள் அந்த பெண்ணை ஒரு இடத்தில் காரிலிருந்து வீசி விட்டு சென்றனர் .பிறகு அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் ,போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

Contact Us