“ஐந்து வயசு பையனை கடத்திக்கொண்டு போய் …”காதலி குடும்பத்தை பழிவாங்க ஒரு காதலன் செஞ்ச வேலை

 

காதலியை கல்யாணம் செய்து கொடுக்காத அவரின் குடும்பத்தினரை மிரட்ட ஐந்து வயது சிறுவனை கடத்திய காதலன் கைது செய்யப்பட்டார் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் தினேஷ் யாதவ் என்ற வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு 22 வயதான பெண்ணை காதலித்து வந்தார் .அந்த பெண்ணும் அந்த தினேஷை காதலித்தார் .இந்நிலையில் அந்த தினேஷ் அந்த பெண்ணை திருமணம் செய்ய ஆசைப்பட்டு அந்த பெண்ணின் வீட்டில் சென்று பெண் கேட்டார்.

ஆனால் அந்த பெண்ணின் உறவினர்கள் அவருக்கு பெண் தர முடியாது என்று கூறி வீட்டை விட்டு துரத்தி விட்டனர் .இதனால் கோபமடைந்த அந்த தினேஷின் மூளை குறுக்கு வழியில் வேலை செய்தது .அதன் படி அவரின் காதலியின் உறவுக்காரர் பைஜ்நாத் மவுரியின் ஐந்து வயது மகன் அப்பாஸை கடத்தி செல்ல திட்டமிட்டார் .

அதன் படி தினேஷ் யாதவ் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் அந்த ஐந்து வயது சிறுவனை பள்ளியிலிருந்து கடத்தி சென்று விட்டார் .அதன் பிறகு அந்த சிறுவனின் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் ,அங்குள்ள காவல் நிலையத்தில் சென்று புகார் கூறினர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த சிறுவனை பல இடங்களில் தேடினர் .பிறகு அவரை தினேஷ் என்ற நபர் காதலியை கல்யாணம் செய்ய கேட்டு கடத்தி சென்றதை கண்டுபிடித்தனர் .பின்னர் அந்த சிறுவனை அந்த தினேஷிடமிருந்து மீட்டு அவரின் பெற்றோரிடம் சேர்த்தனர் ,பின்னர் சிறுவனை கடத்திய தினேஷை கைது செய்தனர் .

Contact Us