14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; ரயில் நிலையத்தில் நேர்ந்த கொடூரம்!

 

மகாராஷ்டிராவில் ரயில்நிலையத்தில் 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் உள்ள உல்ஹாஸ்நகர் ரயில் நிலையத்தில் இருந்து 14 வயது சிறுமி தனது நண்பர்கள் இருவருடன் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்துள்ளார்.

அந்த சிறுமியை பின்தொடர்நது வந்த நபர், சுத்தியைக் காட்டி மிரட்டி நண்பர்கள் இருவரையும் அச்சுறுத்தியுள்ளார். சிறுமியை அருகில் இருந்த இருட்டு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சிறுமியை கடுமையாக தாக்கியுள்ளார்.

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; ரயில் நிலையத்தில் நேர்ந்த கொடூரம்!
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டுச் சென்ற போலீசார், சிறுமியை அந்த நபரிடம் இருந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், வன்கொடுமை செய்த நபரை கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குடிபோதையில் சிறுமியை வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் சென்று வரும் ரயில் நிலையத்திலேயே சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us