பரோட்டா சூரி வீட்டு திருமண விழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..! மதுரையில் பரபரப்பு

மதுரை அருகே நடிகர் சூரி வீடு திருமண நிகழ்வில் நகை திருடப்பட்டுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் சிறுசுறு கதாபத்திரத்தில் அறிமுகமாகி காமெடியனாக வளம் வந்து ஹீரோவாக உயர்ந்திருப்பவர் பரோட்டா சூரி. இவரது சொந்த ஊர் மதுரை. இந்த நிலையில், கடந்த 9 ஆம் தேதி சூரியின் அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகளுக்கு சிந்தாமணி பகுதியில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடந்தது.

திருமணத்தன்று அன்று மணமகளின் அறையில் இருந்த 10 சவரன் நகை மாயமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் தொடக்கத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை. கொரோனா காலகட்டம் என்பதால் திருமண விழாவுக்கு அதிக பேர் வரவில்லை என கூறப்படுகிறது.

நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில நடிகர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில் நகை காணாமல் போன விவகாரம் குறித்து வெளியில் சொல்ல முடியாமல் இருந்துள்ளனர்.

இந்த நிலையில், பலரும் கொடுத்த ஆலோசனையின்படி சூரி வீட்டார் கீரைத்துறை காவல் நிலையத்தில் இப்போது புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், காணமால் போன நகையின் மதிப்பு சுமார் 2 லட்சம் என்றும் கூறப்பட்டுள்ளது.

Contact Us