‘ஹ்ம் சொல்லுங்க’… போன் பேசிக்கொண்டே தடுப்பூசி போட்ட செவிலியர்..!

மன்னார்குடி அருகே காந்தாரி கிராமத்தில் செல்போன் பேசிக்கொண்டே கொரோனா ஊசி போடும் செவிலியர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள பெறுகவாழ்ந்தான் அருகே காந்தாரி கிராமத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பெருகவாழ்ந்தான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்தும் பெண் செவிலியர் ஒருவர் செல்போன் பேசிய படியே ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார். பணி நேரத்தில் செல்போன்பேசிக்கொண்டு கவனகுறைவாக தடுப்பூசி செலுத்தும் இத்தகைய செவிலியர்கள் தடுப்பூசியை மாற்றி செலுத்தும் சூழல்கள் ஏற்படும்.

இதனால் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் என்ன விதமான தடுப்பூசி தங்களுக்கு போடப்பட்டுள்ளது என்ற குழப்பம் ஏற்படும். எனவே செவிலியர்கள் பொறுப்பை உணர்ந்து சரியாக செயல்பட வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மன்னார்குடி அருகே நடைபெற்ற தடுப்பூசி முகாமில் கோவிட் ஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு கோவாக்சின் குழப்பமான சூழல் ஏற்பட்டு பின்னர் அது சரிசரி செய்யப்பட்டது.

இத்தகைய சூழலில் இன்றைய தினம் திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஒரே சமயத்தில் 20 ஆயிரம் நபர்களுக்கு கடைசி சிறப்பு முகாம் நடத்தப்படும் சூழலில் செவிலியர் ஒருவரின் கவனக்குறைவால் ஏதேனும் குழப்பம் ஏற்படுமோ என்ற அச்சம் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளது. எனவே சுகாதாரப் பணியாளர்கள் என்பது கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Contact Us