லண்டனில் கவுன்சில் டாக்ஸ் அதிகரிக்க பெரும் வாய்ப்பு- எல்லாம் புவுன்ஸ் பேக் லோன் செய்யும் மாயம் !

பிரித்தானிய அரசு கொரோனா கால கட்டத்தில் வாரி வாரி வழங்கிய சலுகைகளால் தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்ய முடியாமல் தவிக்கிறது. இதில் ஒன்றுதான் பவுன்ஸ் பேக் லோன். யார் எவர் என்று கேட்டுக் கேள்வி இன்றி 50,000 ஆயிரம் பவுண்டுகளை, பிரித்தானிய அரசு வழங்கியது. ஆனால் தற்போது திறைசேரியில் பண பற்றாக்குறை ஏற்பட, மக்கள் செலுத்தும் வரியை அதிகரிக்க திட்டம் தீட்டியுள்ளது. இதன் ஒரு அங்கமாக நஷனல் இன்சூரன்ஸ் டாக்ஸ் கடந்த வாரம் அதிகரிக்கப்பட்டது. இதேவேளை இன்று வெளியாகியுள்ள செய்திகளின் அடிப்படையில்.. Source DM: Families could be hit with higher council tax bills after hike in national insurance, Whitehall chief says:

மக்கள் கவுன்சிலுக்கு செலுத்தும் கவுன்சில் டாக்ஸ் தொகையை அதிகரிக்க பல கவுன்சில்கள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏன் எனில் அரசாங்கம் கவுன்சிலுக்கு கொடுக்கும் பணத்தை சற்று குறைத்துள்ளது. இதனை அடுத்து அதனை ஈடு செய்ய, கவுன்சில் டாக்ஸை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Contact Us