ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள்…. தலைநகரில் செய்த அட்டகாசம்…. வெளியான பரபரப்பு வீடியோ….!!

 

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் தலிபான்களுக்கு எதிராக உருவான தேசிய கிளர்ச்சி படைகளுடன் தலிபான்கள் அதிபயங்கர மோதலை நடத்தியுள்ளார்கள்.

மேலும் பஞ்ஷீர் பள்ளத்தாக்கு தலிபான்களின் வசம் வந்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் இதனை தேசிய கிளர்ச்சிப் படையின் தலைவரான அகமது மசூத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் . இந்நிலையில் தலைநகர் காபூலில் தலிபான்கள் செய்யும் அட்டகாசத்தை அருகிலிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் இடம் பெற்றிருக்கும் காட்சியாவது, காபூலில் வசித்துவரும் பஞ்ஷீர் பள்ளத்தாக்கு மக்களிலுள்ள 2 பேரை தலிபான்கள் பிடித்து அவர்களது கையில் விலங்கை போட்டுள்ளார்கள். அதோடு மட்டுமின்றி கார் ஒன்றிலுள்ள டிக்கியை திறந்து அதனுள் விலங்கு போட்ட 2 பேரையும் தள்ளிவிட்டு காரை ஓட்டிக் கொண்டு செல்கிறார்கள்.

Contact Us