கொரோனா வைரஸ்; பிரித்தானியாவில் ஒரே நாளில் இவ்வளவு பேரா!

 

பிரித்தானியாவில் கொரோனா பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 30ஆயிரத்து 825பேர் பாதிக்கப்பட்டதோடு 61பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 72இலட்சத்து 56ஆயிரத்து 559பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு இலட்சத்து 34ஆயிரத்து 261பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து நான்காயிரத்து 503பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆயிரத்து 55பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இதுவரை தொற்றிலிருந்து மொத்தமாக, 58இலட்சத்து 17ஆயிரத்து 795பேர் பூரண குணமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Contact Us