கோவிலில் எல்லை மீறி போட்டோ ஷூட் நடத்திய பிரபல நடிகை.. புனிதத்தை கெடுத்ததால் அதிரடியாக கைது.!

 

தற்போது சினிமா பிரபலங்கள் விதவிதமான போட்டோக்களை நடத்தி அதனை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை ட்ரெண்ட்டாக வைத்துள்ளனர். அந்த வகையில் சோசியல் மீடியாவில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளவர்தான் மலையாள நடிகை தான் நிமிஷா பிஜோ.

இவர் கேரளாவிலுள்ள அரண்மூலா கோயிலுக்குச் சொந்தமான பாம்பு படகில் செருப்பு அணிந்து கொண்டு, ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் உடையில் போட்டோ ஷுட் நடத்தியதன் மூலம் பெரும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார்.

ஏனென்றால் பெண்களுக்கு அனுமதி இல்லாத பாம்பு படகில் நிமிஷா பிஜோ எல்லை மீறி போட்டோ ஷூட் நடத்தியதால், கோயில் தேவஸ்தானம் அளித்த புகாரின் பேரில் நடிகை நிமிஷா மற்றும் அவருடைய நண்பர் உன்னியும் கைது செய்யப்பட்டார்.

அதன் பிறகு, ‘போட்டோ ஷூட் நடத்தியது என்னுடைய தவறு. மன்னித்து விடுங்கள். மேலும் அங்கு இருப்பவர்கள் யாரும் என்னை தடுக்காமல் போட்டோ ஷூட் நடத்திய என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நான் தெரியாமல் தவறு செய்து விட்டேன். இனி மேல் எந்த தவறும் நடக்காது என்று குறிப்பிட்டுள்ள தனிப்பட்ட பத்திரங்களை வழங்கியதை தொடர்ந்து காவல் நிலையத்திலிருந்து நிமிஷா மற்றும் உன்னி விடுவிக்கப்பட்டனர்.

இருப்பினும் கோயில் புனிதத்தை அவமானப்படுத்தியதற்காக நிமிஷாவிற்கு எதிராக சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான கண்டனங்கள் குவிகிறது.

Contact Us