காதலிக்கிறது ஒரு பொண்ண, கல்யாணம் பண்றது இன்னொரு பொண்ணு, வாழ்றது வேற பொண்ணுடா? நல்லா வருவீங்க

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை காண்பதற்கென்றே இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை கரெக்டான நேரத்திற்கு தொலைக்காட்சி முன் அமர்ந்துண்டு. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு எக்கச்சக்கமான ரசிகர் கூட்டம் இருக்கின்றனர்.ஏனென்றால் இதில் அண்ணன்-தம்பி பாசத்தையும் கூட்டுக்குடும்பத்தின் மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.

இந்தக் காலத்தில் தனிக் குடும்பமாக வாழ்வோரின் மத்தியில் கூட்டுக் குடும்பமாக இருந்தால் எப்படி இருக்கும் என்பதை பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் கண்டு பூரிப்படைகின்றனர். இந்த சூழலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூன்றாவது தம்பியாக நடித்து கொண்டிருக்கும் கண்ணன் ஐஸ்வர்யாவை திடீரென்று காதல் திருமணம் செய்துகொண்டார். அதைத்தொடர்ந்து இருவரும் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு தனியாக வீடு எடுத்து தங்கி உள்ளனர்.

எனவே கடந்த சில நாட்களாகவே கண்ணன் ஐஸ்வர்யாவை வைத்தே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நகர்ந்துகொண்டிருக்கிறது. தற்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருந்த விஜே தீபிகா என்பவர் சீரியலில் இருந்து விலகி உள்ளார். இவர் வேறு சில சீரியல்களில் நடிக்க கமிட் ஆகி இருப்பதால் இந்த சீரியலில் இருந்து விலக முடிவு எடுத்துள்ளாராம்.

ஆகையால் ஐஸ்வர்யாவிற்கு பதிலாக ஈரமான ரோஜாவே என்ற சீரியலில் நடித்த சாய் காயத்ரி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இன்று முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஐஸ்வர்யா  கேரக்டரில் சாய் காயத்திரி நடிக்கப்போகும் காட்சிகள் காண்பிக்கப்பட உள்ளது. இதனை முன்பே சமூக வலைதளங்களில் பார்த்த ரசிகர்கள், ‘கண்ணன்-சாய் காயத்ரி ஜோடி சுத்தமா செட் ஆகலை தயவுசெய்து மாற்றிவிடுங்கள்’. என்றும்,

அதேபோல் கண்ணன் காதலிக்கும்போது ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த நடிகை வைஷாலி. அதன்பின் கல்யாணம் செய்யும் போது ஐஸ்வர்யாவாக தீபிகா நடித்தார். தற்போது கல்யாணத்திற்குப் பிறகு ஐஸ்வர்யாவாக சாய் காயத்ரி நடிக்கவுள்ளார். இப்படி மனுஷன் காதலிக்கிறது ஒரு பொண்ண, கல்யாணம் பண்றது இன்னொரு பொண்ணு, வாழ்றது வேற பெண்ணுடனா? என்றெல்லாம் சீரியல் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கண்ணனுக்கு சாய் காயத்ரி அக்கா போல இருக்கிறார் என்றெல்லாம் பாண்டியன் ஸ்டோர் ரசிகர்கள் ஐஸ்வர்யா மாற்றத்திற்கு எதிராக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Contact Us