“நாலு மாசம் நல்லா அனுபவிச்சிட்டு இப்ப …” ..புது மனைவிக்கு நேர்ந்த கொடுமை

 

புது மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து விஷம் வைத்து கொன்ற புகுந்த வீட்டினரை போலீஸ் கைது செய்தது. உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் ஆசாத் சக் பகுதியில் வசிக்கும் முஸ்கான் என்ற பெண்ணை காசிப் என்பவர் கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.அந்த பெண் அந்த கணவனோடு கடந்த நான்கு மாதங்கள் வாழ்ந்து வந்தார் .பின்னர் அந்த கணவனுக்கு அந்த புது மனைவி மீதிருந்த மோகம் தீர்ந்து போனது .அதன் பிறகு அவர் அந்த பெண்ணை கழட்டி விட திட்டம் போட்டார் .

அதனால் அந்த பெண் தாங்கள் கேட்ட வரதட்சணையை கொண்டு வரவில்லை என்று கூறி பிரச்சினையை உண்டாக்கினார் .மேலும் அவரின் தாயார் மற்றும் வீட்டிலிருந்த மற்ற உறவினர்களிடமும் இது பற்றி கூறி அந்த புது மனைவியிடம் வரதட்சணை கேட்க சொன்னார் .அதனால் அந்த வீட்டிலிருந்த ஐந்து உறவினர்களும் சேர்ந்து கொண்டு அந்த பெண்ணை அவரின் வீட்டில் வரதட்சணை மேலும் வாங்கி வர சொல்லி கொடுமைப்படுத்தினர் .அதனால் அந்த பெண் தனனுடைய வீட்டில் இது பற்றி கேட்டார் ஆனால் அவர்களால் மேலும் கொடுக்க முடியாத நிலையில் இருந்தனர் .

அதனால் அந்த புகுந்த வீட்டிலிருந்த அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணுக்கு கடந்த வாரம் உணவில் விஷம் வைத்து கொலை செய்து விட்டார்கள் .
அது பற்றி கேள்விப்பட்ட அந்த பெண்ணின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிந்து அந்த பெண்ணின் உறவினர்கள் ஐந்து பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

 

Contact Us