அந்த மாதிரி மோசமான கதையை தேர்வு செய்த ரகுல் ப்ரீத் சிங்.. சர்ச்சையானதால் சோலி முடிந்தது

 

தமிழ் சினிமாவில் தடையறத்தாக்க படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இதனை தொடர்ந்து தமிழில் ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே., தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது ரகுல் ப்ரீத் சிங் கைவசம் தமிழில் அயலான், இந்தியன்-2, ஹிந்தியில் அட்டாக், மேடே, தேங்க்காட், டாக்டர் ஜி என பல படங்கள் உள்ளன. இப்படி பிசியாக நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் காண்டம் சம்பந்தப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய படத்திலும் நடிப்பதாக இருந்தார்.

இந்த படத்தில் நடிக்க பாலிவுட் நடிகைகளே மறுப்பு தெரிவித்த நிலையில், ரகுல் பிரீத் சிங் துணிச்சலாக நடிக்க சம்மதம் தெரிவித்தார். இப்படத்தின் கதைப்படி ஒரு பிரபல நிறுவனம் காண்டம்களை தயாரித்து அதை இளம் பெண்களிடம் கொடுத்து பரிசோதனை செய்வது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டு இருந்தது.

இதுபோன்ற ஒரு காண்டம் பரிசோதனையாளர் வேடத்தில் தான் ரகுல் ப்ரீத் சிங் நடிக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். ஆனால் இப்போது இப்படத்தை கைவிட்டுவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இல்லை என்றாலும் படம் முழுவதும் முடிந்து வெளியீட்டிற்கு தயாராகும் சமயத்தில் நிச்சயம் ஏதேனும் பஞ்சாயத்து வரும் என நினைத்து படத்தின் தயாரிப்பாளர் படத்தை கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இதுபோன்ற ஒரு படத்தை தயாரிப்பதற்கு காண்டம் நிறுவனங்களே எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், படம் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். ஏற்கனவே போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கியுள்ள ரகுல் ப்ரீத் சிங்கிற்கு இதுபோன்ற சர்ச்சைக்குரிய படம் தேவைதானா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Contact Us