சதா சொலிசிட்டரில் வேலை பார்க்கும் சிங்கள சொலிசிட்டர் குடி போதையில் காரை ஓடி கம்பத்தில் மோதினார் !

லண்டன் மனோ பார்கில் உள்ள, சதா சொலிசிட்டர் நிலையத்தில் உள்ள கலும் குணரட்ண என்னும் சொலிசிட்டர் கடும் மது போதையில் காரை ஓட்டிச் சென்றது மட்டுமல்லாது. தான் சென்ற பாதையை மறந்து எதிர் திசையில் காரை வேகமாக செலுத்தி. BT கம்பம் மேல் மோதியுள்ளார். சதா சொலிசிட்டர் நிலையம், பல இலங்கையர்களின் குடிவரவு மற்றும் அசேலம் போன்ற வழக்குகளை எடுத்து நடத்தும் ஒரு நிலையம். இவர்களே இப்படி சட்டத்தை மீறலாமா என்ற தலைப்பில் ஆங்கில ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கலும் குணரத்தின ஒரு சிங்களவர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம். இவருக்கு நீதிமன்றம்…

10,000 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளது. மேலும் இவரது லைசனஸ் தடை செய்யப்பட்டுள்ளது என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.  குறித்த சம்பவம் 2019ல் இடம்பெற்று இருந்தது. இவருக்கு 2 வருடம் லைசன்ஸ் தடை செய்யப்பட்டு இருந்த நிலையில். தற்போது 10,000 பவுண்டுகளை கட்டுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என மேலும் அறியப்படுகிறது. (Drunk immigration lawyer who drove his car towards oncoming traffic and smashed into a telegraph pole and nine parked vehicles is fined £10,000)

Contact Us