உலகிலேயே அதிக உயரமான மனிதர்கள் கொண்ட நாடு.. தற்போது உயரம் குறைய காரணம் என்ன..?

 

உலகிலேயே அதிக உயரம் கொண்ட மக்கள் இருப்பதாக, கடந்த 1958 ஆம் வருடத்திலிருந்து பெருமை பெற்ற நாடு நெதர்லாந்து. எனினும், தற்போது அந்நாட்டு மக்களின் வளர்ச்சி குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 1980 ஆம் வருடத்தில் பிறந்த ஆண்களை விட 2001 ஆம் வருடத்தில் பிறந்த ஆண்கள் ஒரு சென்டிமீட்டர் உயரம் குறைவாக இருக்கிறார்கள் என்று சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில் தெரியவந்திருக்கிறது.

இதேபோன்று, அந்நாட்டுப் பெண்களின் உயரம் 1.4 சென்டிமீட்டர் அளவு குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றமானது, ஏழ்மை நிலை, குடியேற்றம் மற்றும் ஆரோக்கியமில்லாத விரைவு உணவுகள் சாப்பிடுவது, போன்ற காரணங்களால் தான் ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

Contact Us