கடலூர் என்கவுண்டர்: ரவுடியின் மனைவி தகாத உறவு, போட்டு தள்ளிய சிறுவர்கள்..!

கடலூர் மாவட்டம் சுப்புராயலுநகர் பூந்தோட்ட சாலையை சேர்ந்த ரவுடி வீராவை கடந்த பிப்ரவரி 16ம் தேதி அன்று கிருஷ்ணன் (30) என்பவரது கேங் தலையை துண்டித்து கொலை செய்தது. இதனையடுத்து, குடிமியான்குப்பம் பகுதியில் பதுங்கியிருந்த கிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேரை புதுப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணனின் கூட்டாளிகளை திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலர்கள் கிருஷ்ணனை மட்டும் கொலை நடந்த இடத்தை அடையாளம் காண அழைத்து சென்றனர். அப்போது, கிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர் தீபனை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது என்கவுண்டர் செய்யப்பட்டார்.

 

இந்த நிலையில், கிருஷ்ணனின் மனைவி காந்திமதி (27) நேற்று இரவு அப்பகுதியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் காந்திமதியை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் வெட்டிவிட்டு தப்பினர்.

இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த காந்திமதியை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பாதி வழியிலேயே காந்திமதி இறந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருப்பாதிரிப்புலியூர் போலீசார், காந்திமதியை கொலை செய்யப்பட்ட வீராவின் கூட்டாளிகள் கொலை செய்தார்களா? வேறேதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை செய்து வந்தனர்.

விசாரணையில், காந்திமதிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், சமீப காலமாக அரவிந்தனுடன் பழகுவதை நிறுத்திக்கொண்ட காந்திமதி ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த வேறொரு நபருடன் பழகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அரவிந்தன் தனது நண்பர்களுடன் சேர்ந்து காந்திமதியை கொலை செய்தது தெரிய வந்துள்ளது. காந்திமதியை கொலை செய்த நான்கு பேரில் 3 பேர் சிறுவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Contact Us