உடலுறவுக்கு மறுத்த பெண்ணை கொன்றுவிட்டு சடலத்தை பலாத்காரம் செய்த வாலிபர்..!

இந்தியாவில் ஒவ்வொருநாளும் கூட்டு பலாத்காரம் கொடுமைகள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக வட மாநிலங்களில் கோரமாக இச்சம்பவங்கள் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இவ்வாறு கடத்தப்படும் பெண்கள் ஆள் இல்லாத இடத்திற்கு தூக்கி செல்லப்பட்டு வார்த்தைகளில் விவரிக்க முடியாத வகையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்கள் மிருக தனமாக உள்ளது.

இதற்கு மத்தியில் 60 வயது மூதாட்டியை 19 வயது இளைஞர் கொலை செய்து சடலத்துடன் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கரில் 60 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று இரவு மூதாட்டி தனியாக உறங்குவதை அறிந்துகொண்ட 19 வயது வாலிபர் வீட்டிற்குள் சென்று பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளளார்.

அப்போது அந்த மூதாட்டி சத்தம் போட்டுள்ளார். இதனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு தெரிய கூடாது என்பதற்காக மூதாட்டியை அங்கேயே கொலை செய்துள்ளார்.

கொலை செய்துவிட்டு வெளியே வந்த அந்த வாலிபர் மீண்டும் உள்ளே சென்று மூதாட்டியின் சடலத்தை பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர்.

இதுகுறித்து விளக்கிய போலீஸார், சம்பவத்தன்று அந்த வாலிபர் குடிபோதையில் இருந்ததாகவும், பலாத்காரம் முயற்சி தோல்வி அடைந்ததால் மூதாட்டியை கொன்றுவிட்டு சடலத்தை பலாத்காரம் செய்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Contact Us