பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிசூடு தாக்குதல்.. ஜன்னல் வழியே குதிக்கும் மாணவர்கள்.. பதற வைக்கும் வீடியோ வெளியீடு..!!

 

ரஷ்ய நாட்டிலுள்ள பெர்ம் மாநிலத்தில் இருக்கும் ஒரு பல்கலைகழகத்தில் மர்ம நபரால் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் குறைந்தது ஆறு நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 8 நபர்கள் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

பல்கலைகழகம், இணையதளத்தில், தற்போது, வளாகத்தில் இருப்பவர்கள் முடிந்த அளவிற்கு வெளியேறி விடுமாறு, தெரிவித்துள்ளது. இல்லையெனில், ஒரு அறையில் பாதுகாப்பாக இருந்துகொள்ளுமாறு தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் மாணவர்கள் ஜன்னல் வழியே குதித்து வெளியேறும் அதிர்ச்சிக் காட்சிகள் வெளியாகியிருக்கிறது.

மேலும், பல்கலைகழகத்தில் நுழைந்து தாக்குதல் நடத்திய நபர், அதே பல்கலைக்கழகத்தில் பயிலும் Timur Bekmansurov என்ற 18 வயது இளைஞர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த நபர் இணையதளத்தில் தாக்குதல் நடத்தப்போவதாக முன்னதாகவே தகவல் பகிர்ந்துவிட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us