கோபத்தில் பிரான்ஸ் அதிபர்.. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த முடிவு..!!

 

பிரான்ஸ் அதிபர், தங்கள் நாட்டுடனான நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்ததால் கடும் கோபம் அடைந்துள்ளார். அதாவது, நீண்ட நாட்களாக தங்களுடன் நட்பு நாடாக இருந்த அமெரிக்காவும் தங்களுக்கு எதிராக செயல்பட்டதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கான தங்கள் நாட்டின் தூதர்களை திரும்ப பெற்றார். எனவே, அவரை சமரசம் செய்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி மற்றும் பிரிட்டன் பிரதமர் இருவரும் முயற்சி மேற்கொண்டுள்ளார்கள். அதன்படி, இருநாட்டு தலைவர்களும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தொலைபேசியில் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனை தொடர்புகொள்ள கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

இதுமட்டுமல்லாமல், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தங்களுக்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள மோதலை சரிசெய்துகொள்வதற்காக, நேற்று, பிரான்ஸ் நாட்டை ஓரங்கட்டுவதற்காக இத்திட்டம் மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பில், பிரான்ஸ் நாட்டு நண்பர்கள் வருத்தப்படத்தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

Contact Us