‘பெண்கள் போக கூடாது’…. பறிக்கப்படும் உரிமைகள்…. தகவல் வெளியிட்ட இடைக்கால மேயர்….!!

 

ஆப்கானிஸ்தான் சுமார் இருபது ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 15 ஆம் தேதி மீண்டும் தலீபான்களின் பிடியில் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமை பறிபோகும் என்ற அச்ச உணர்வு அனைவரிடமும் ஏற்பட்டது. இதற்கிடையில் தான் தலீபான்கள் “பழைய அரசை போல் செயல்பட போவதில்லை” என்று அறிவிப்பு விடுத்தனர். ஆனால் அதற்கு மாறாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.

சான்றாக “பெண்கள் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள கூடாது, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது, பெண்கள் வெளியே செல்லும் பொழுது பர்தா கண்டிப்பாக அணிய வேண்டும்” போன்ற கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பெண் ஊழியர்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்ற புதிய கட்டுப்பாட்டை அறிவித்துள்ளனர்.

இது குறித்து தலீபான்களின் இடைக்கால மேயர் ஹம்துல்லா நமோனி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “வடிவமைப்பு, பொறியியல் துறை மற்றும் பொது கழிப்பிடங்களில் பணிபுரியும் பெண்கள் மட்டும் அலுவலகம் செல்ல வேண்டும். மற்ற பெண் ஊழியர்கள் அனைவரும் வேலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Contact Us