“ரெண்டு தடவை என்னை பலாத்காரம் செஞ்சி …” – பெண்ணிடம் சிக்கிய போலீசின் கண்ணீர் கதை

 

தன்னை பலாத்காரம் செய்ததாக போலியாக போலீஸ்காரர் மீது புகார் கொடுத்த பெண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர் ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் உள்ள மிர்ச்ச்பூர் கிராமத்தைச் சேர்ந்த மணிம் சரோஹா, என்பவர் ஃபரிதாபாத்தில் உள்ள சூரஜ்குண்ட் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றுகிறார்.அவர் 2019 இல் காவல் படையில் ஆட்சேர்ப்புக்குத் தயாரானபோது, ​​கானூரில் உள்ள தனது அத்தைவீட்டில் தங்கியிருந்தார்.

அப்போது அவர் அந்த வீட்டிற்கு அருகே வசித்த 40 வயதான பெண்ணுடன் அவர் நட்புடன் பழகி வந்தார் . பிறகு அவர் போலீசில் சேர்ந்ததை தொடர்ந்து, அந்தப்பெண் அவர் மீது ஒரு கற்பழிப்பு வழக்கு பதிவு செய்வதாக மிரட்டி அவரிடம் பணம் கேட்டார் .

ஆனால் அவர் பணம் தர மறுத்த போது அந்த பெண் அவர் மீது போலியாக பலாத்கார புகார் கொடுத்தார் .இது போல் அவர் இரண்டு முறை பலாத்கார வழக்கை அவர் மீது கொடுத்தார் .

அதனால் பயந்து போன அவர் அப்போது அந்த பெண்ணுக்கு 2.5 லட்ச ரூபாய் பணம் கொடுத்தார் .அதன் பிறகு அந்த பெண் அவர் மீது கொடுத்த பலாத்கார வழக்கை வாபஸ் பெற்றார் .அதன் பிறகு அந்த 20 லட்ச ரூபாய் பணம் கேட்டு மேலும் அவரை மிரட்டினார் .

அதனால் சரோகா அந்த பெண் மீது போலீசில் புகார் கொடுத்தார் .அந்த கான்ஸ்டபிளின் புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 389 (மிரட்டி பணம் பறித்தல்) மற்றும் 506 (கிரிமினல் மிரட்டல்) பிரிவுகளின் கீழ் அந்த பெண் மீது நார்னாண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Contact Us