பிடிச்ச முயலுக்கு 3 கால் என்று விறைப்பாக நின்ற கோட்டபாய -அப்படியே பூசி மெழுகிய ஐ.நா செயலாளர்-

ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுடன், கோட்டாபய ராஜபக்ஷ கலந்துரையாடினார் என அதிர்வு இணையம் அறிகிறது. அன்டோனியோ சர்வதேச விசாரணை வேண்டும் என்று கூற, கோட்டபாயவோ உள்ளக பொறிமுறை தான் இலங்கைக்கு நல்லது என்று திட்டவட்டமாக கூறி மறுத்து விட்டார். போதாக் குறைக்கு, சர்வதேச தமிழர்கள் உள்ளக விசாரணை பொறிமுறைக்கு ஒத்துவர வேண்டும் என்று கூறி, அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் நியூயோர்க்கில் வைத்து கேட்டுள்ளார். இதில் அவர் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சில தமிழர்கள்….

சென்று அவரை சந்தித்தும் உள்ளார்கள். மானம் கெட்ட இந்த தமிழர்களை என்ன சொல்வது ? குறிப்பாக கொழும்பில் ஹோட்டல் வைத்திருக்கும் நபர்கள் சிலரும். தர்ம ஸ்தாபனம் என்ற பெயரில் பணத்தை வெள்ளை இன மக்களிடம் கறந்து. அதில் 10% சத விகிதத்தை மட்டும் இலங்கைக்கு அனுப்பி விட்டு அந்த பணத்தில் வயிறு வளர்க்கும் கோஷ்டியில் உள்ள சிலரும் கோட்டாவை அமெரிக்காவில் சந்தித்துள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

Contact Us