சற்று முன் SURREY M25ல் இரண்டு பக்கத்தையும் முடக்கிய ஆர்பாட்டக்காரர்கள்- பெரும் ரகளை !

இன்று காலை (சற்று முன்னர்) தமிழர்கள் அதிகம் வசிக்கும் குரைடனுக்கு(Croydon) அருகாமையில் உள்ள, M25 நெடுஞ்சாலையை ஆர்பாட்டக்காரர்கள் 5வது நாளாக முடக்கியுள்ளார்கள். இவர்கள் 2 பக்கத்தையும் முடக்கியதால் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கே குவிந்த பொலிசார். அவர்களை பலாத்காரமாக அப்புறப்படுத்தி வருகிறார்கள். இது போன்ற வீதி மறிப்பு போராட்டத்தில் ஈடு பட்டால் 5 வருட சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று, உள்துறை அமைச்சர் பிரீத்தி பட்டேல் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்தார். ஆனால் இந்த ஆர்பாட்டக்காரர்கள் கணக்கில் எடுத்தபாடாக இல்லை. மேலும் சொல்லப் போனால் அப்படி ஒரு சட்டமும் இல்லை. இனி தான் அப்படி ஒன்றை வர்த்தமானி மூலம் அறிவிக்க வேண்டும்.

வாகனங்கள் வீதிகளில் அதிகம் ஓடுவதால், காபனீர் ஆக்சைட் வெளியேறி பூமி மாசு பட்டு வருகிறது. சொல்லப் போனால் பூமி வெப்பமடைந்து வருகிறது. வெளிநாட்டில் வசிக்கும் பலர் இந்த கால நிலை மாற்றத்தை ஏற்கனவே உணர்ந்து இருப்பீர்கள். சுமார் 10 வருடங்களுக்கு முன்னர், செப்டெம்பர் மாதம் என்றால்.. அது குளிர் மிகுந்த மாதமாக தான் இருக்கும். ஆனால் தற்போது செப்டெம்பர் மாதத்தில் கூட வெக்கை அடிக்கிறது. சம்மர் போல உள்ளது. இதற்கு காரணம் வழி மண்டலத்தில் ஏற்பட்டு வரும் பெரும் ஓட்டை. இதனால் சூரியனின் ஒளி நேராக பூமியை தாக்கி வருகிறது. சூரிய ஒளியை தெறிப்படையச் செய்யும், ஓ-ஸோன் என்ற படம் அழிந்து வருகிறது. இன் நிலை நீடித்தால்… உலகம் ஒரு காலத்தில் கருகி விடும். உயிர் இனங்கள் அற்ற ஒரு கிரகமாக மாறி விடும்.

நாம் சொகுசாக வாழ்ந்து கொண்டு, இனி வரும் சந்ததிகளுக்கு பெரும் தொல்லையை கொடுக்க உள்ளோம். அவர்கள் வேறு யாரும் அல்ல. உங்கள் பேரன் பேத்திகள் தான், என்பதனை மறக்க வேண்டாம். அதனால் தேவை அற்ற பயணங்களை குறைக்க வேண்டும். மின்சார கார்களை பாவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் வரவேண்டும், என்றே இந்த போராட்டம் நடக்கிறது. உண்மையில் சொல்லப் போனால், அவர் போராடுவதில் எந்த ஒரு பிழையும் இல்லை என்று தான் கூறவேண்டும். ஆனால் யார் ஏற்றுக் கொள்வார்கள் இதனை ? வீடியோ இணைப்பு

அதிர்வுக்காக
கண்ணன்:

Contact Us