யாழ் நல்லுாரைச் சேர்ந்த ஆவா குழு காவாலி “முத்து“ போதைப் பொருளுடன் கைது!!

 

ஆவா குழுவை சேர்ந்த ஒருவர் போதைப்பொருளுடன் சிக்கியுள்ளார். அவரது நண்பர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் பயணித்த காரிலிருந்து வாளும் கைப்பற்றப்பட்டது. ஆவா ரௌடிக்குழு உறுப்பினரான நல்லூர் முத்து என்பவரே கைதாகினார்.

அவர் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இரகசியமாக பின்தொடர்ந்த பொலிஸ் புலனாய்வு உத்தியோகத்தர்கள், இன்று அதிகாலை முத்து பயணித்த காரை பரமேஸ்வரா சந்தியில் வழிபறித்து சோதனையிட்டனர்.

இதில் 3 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டது. காருக்குள்ளிருந்து வாளும் மீட்கப்பட்டது.

Contact Us