“என் நண்பர்கள் முன்னாடியே ஏன் இப்படி செய்யுறே?” -ஒரு மகனால் தந்தைக்கு நேர்ந்த கதி

 

உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள டிங்கு நகரில் வசிக்கும் அமன் யாதவ் என்ற 19 வயதான 10 ஆம் வகுப்பு மாணவர் தனது தந்தை அகிலேஷ் யாதவுடன் வசித்து வந்தார் .அந்த அமன் படிக்காமல் தன்னுடைய நண்பர்களோடு ஊர் சுற்றி உல்லாசமாக இருந்துள்ளார் .அதை பார்த்த அவரின் தந்தை அவரின் மகன் அமனை பலமுறை கண்டித்தார் .

ஆனால் அந்த மகன் தந்தை பேச்சை கேட்காமல் மீண்டும் தன்னுடைய நண்பர்களுடன் செல்போனில் அரட்டையடித்து கொண்டு ,பார்ட்டி ,பீச் என்று வாழ்ந்து வந்தார் .அதனால் ஒரு நாள் அந்த தந்தை அகிலேஷ் அவரின் மகன் தன்னுடைய நண்பர்களுடன் இருந்தபோது ,அந்த இடத்திற்கு வந்து அவர்கள் முன்னிலையிலேயே கண்ணா பின்னாவென்று திட்டினார் .அதனால் அந்த மகனுக்கு தந்தை மீது கடும் கோபம் வந்துள்ளது .

அதனால் அவர் ஒரு துப்பாக்கியையே எடுத்து கொண்டு தன்னுடைய தந்தை இருக்குமிடத்திற்கு சென்றார் .பின்னர் அந்த துப்பாக்கியால் அவரின் தந்தையை நோக்கி சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றார் .இந்த சம்பவத்தில் அகிலேஷ் காயமடைந்தார் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.பின்னர் இந்த துப்பாக்கி சூடு பற்றி போலீசுக்கு தகவல் தெரிந்தது .அதனால் போலீசார் தந்தையை சுட்ட மகன் அமன் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Contact Us