அலறியடித்துக் கொண்டு ஓடிய சீரியல் நடிகை: சமூகவலைதளத்தில் வைரலாகும் காணொளி

 

வெள்ளித்திரை போன்றே சின்னத்திரையை காண்பதற்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பிரபலமான தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணானே கண்ணே சீரியலில் கதாநாயகியாக மீரா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் தான் நிமிஷா.

இவரை காண்பதற்கு என்றே இளைஞர்களும் இந்த சீரியலை அனு தினமும் தவறாமல் பார்க்கின்றனர். மேலும் இந்த சீரியலில் நிமிஷா, அப்பாவின் பாசத்திற்கு ஏங்கும் மகளாக நடித்துக் கொண்டிருக்கின்றார்.

இன்னிலையில் நிமிஷாவின் அப்பாவாக கௌதம் கதாபாத்திரத்தில் நடிகர் பப்லு நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்த சூழலில் பப்லு நடிகையின் நிமிஷாவை, பயமுறுத்தும் வகையில் படுத்துக்கொண்டு பாம்பு போல் ஊர்ந்து வந்து அவருடைய காலை சீண்டியதும், நிமிஷா அலறியடித்துக்கொண்டு ஓடியுள்ளார்.

 

Contact Us