“என்னை காதலிச்சிட்டு எங்க அம்மாவை ஏண்டா …”காதலி கிடைக்காத ஆத்திரத்தில் வாலிபர் செய்த கேவலம்.

 

மகளை திருமணம் செய்துகொடுக்க மறுத்ததால் அந்த பெண்ணின் தாயாரின் படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகத்தில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்

கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் 17 வயது மைனர் பெண் வசித்து வருகிறாள். இந்த மைனர் பெண் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அந்த மைனர் பெண்ணுக்கும், கலபுரகியை சேர்ந்த 25 வயது வாலிபருக்கும்சமூக ஊடகம் மூலம் பழக்கம் உண்டானது. இதனால் அவர்கள் இருவரும் ஊடகத்தில் சாட் செய்து வந்தனர்.. இந்த நிலையில் அந்த பெண்ணின் தாயிடமும் அந்த வாலிபர் பேசி வந்து உள்ளார்.
மேலும் மைனர் பெண்ணும், அவரது தாயும், அந்த வாலிபர் கேட்டு கொண்டதன்பேரில் தங்களது புகைப்படங்களை அவருக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இந்த நிலையில் அவர் திடீரென்று அவரை ஒரு தலையாக காதலிக்க ஆரம்பித்தார் .அதனால் அந்த மைனர் பெண்ணின் தாயிடம், உங்களது மகளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று வாலிபர் கேட்டு உள்ளார். ஆனால் அதற்கு மைனர் பெண்ணின் தாய் மறுத்து விட்டார்

அதனால் கோவப்பட்ட அந்த வாலிபர் அந்த பெண்ணின் தாயாரின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகத்தில் வெளியிட்டு விட்டார் .அதை பார்த்த பலர் அதைப்பற்றி அந்த பெண்ணிடம் கூறினார்கள் .அதனால் அந்த பெண்ணும் அவரின் தாயாரும் அந்த போட்டோவை பார்த்து அதிர்ந்து ,அங்குள்ள காவல்நிலையத்தில் அந்த வாலிபர் மீது புகார் கூறினார்கள் .போலீசார் வழக்கு பதிந்து அந்த வாலிபரை கைது செய்தனர்

Contact Us