லண்டனில் £400 பவுண்டுகளால் உயரவுள்ள கேஸ் பில்- மின்சார விலையும் எகிறும் அக்டோபர் 1 முதல் !

பிரித்தானியாவில் நாடு தழுவிய ரீதியில், வீட்டுக்கு வரும் கேஸ் விலை பன்மடங்காக அதிகரிக்க உள்ளது. அக்டோபர் 1ம் திகதி முதல் இந்த மாற்றம் இடம்பெறவுள்ளது. கடந்த 10 வருடங்களாக பிரிட்டிஷ் கேஸ், EDF என்னர்ஜி, E-ON, மற்றும் ஸ்கொட்டிஷ் பவர் ஆகிய 4 நிறுவனங்களும் தமது விலை என்ன என்பதனை,  தெளிவாக தமது இணையத்தில் போட்டு இருந்தார்கள். ஆனால் தற்போது முதன் முறையாக அது நீக்கப்பட்டுள்ளதோடு. ஒப்பிட்டுப் பார்த்து , மலிவான கம்பெனிக்கு மாறும் இணையத்தில் இருந்தும், இந்த 4 கம்பெனிகளும் தாமாகவே விலகி உள்ளது. இதனால் தற்போது எந்த கம்பெனியில் விலை குறைவு என்ற விடையத்தை பார்க்கவே முடியவில்லை. அது போக, ஒப்பிட்டு பார்க்கும் பல இணையத்தளங்கள் முடக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து இது பெரும் சர்சையாக வெடித்துள்ளது. இது நாடாளுமன்றம் வரை சென்றுள்ளதால் MPக்கள் எரிபொருள் நிறுவனங்களை கடுமையாக சாடியுள்ளார்கள்.

வருடத்திற்கு 400 பவுண்டுகள் வரை பில் எகிறவுள்ளது. ரஷ்யாவில் இருந்து குழாய் மூலமாக பிரித்தானியா வரும் கேஸ்சில், பெரும் அளவு குறைக்கப்பட உள்ளது. காரணம் இயற்கை எரிவாய்வு குறைந்து வருகிறது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. அதுவும் உண்மை தான். எவ்வளவு வருடங்களுக்கு தான் பூமிக்கு அடியில் உள்ள எரிவாயுவை எடுக்க முடியும் ?  எனவே தமிழர்களே, பிரித்தானியாவில் சில கம்பெனிகள் மட்டுமே இன்னும் குறைந்த விலையில் கேஸ் சப்பிளை செய்து வருகிறது. அது என்ன கம்பெனி என்று பார்த்து மாறுவது நல்லது. Source: Britain’s winter of woe: Millions face energy bill increases of up to £400 – as ministers consider slapping windfall tax on fat-cat firms profiteering from gas price rise crisis:

Contact Us