“புருஷனை போட்டுத்தள்ளிட்டு இப்படியா செய்வே “-தர்ம பத்தினியின் தரங்கெட்ட செயல்

 

கணவனை கொலை செய்து அவரின் பிணத்தை வீட்டிலேயே ஒளித்து வைத்த மனைவியை போலீஸ் கைது செய்தது ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் சியாமா முண்டாரி என்ற நபரும் அவரது மனைவி ஜிங்கியும் , புவனேஸ்வர் மாநகராட்சியில் (பிஎம்சி) பணிபுரிந்து வந்தனர் .அந்த தம்பதிகளுக்குள் அடிக்கடி தகராறு வந்துள்ளது .அதனால் இருவரும் எந்நேரமும் சண்டை போட்டுக்கொண்டே இருந்தனர் .இதனால் அக்கம் பக்கத்து வீட்டிலுள்ளோர் நிம்மதி இழந்து தவித்தனர் .

இந்நிலையில் கடந்த வாரம் அவர்களுக்குள் சண்டை முற்றியது .அப்போது அந்த ஜிங்கி அவரின் கணவரை அடித்து கொலை செய்து விட்டார் .அதன் பிறகு கணவரின் பிணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார் .இந்த விஷயம் வெளியே தெரிந்தால் போலீஸ் தன்னை பிடித்து கொண்டு போய் விடுமே என்று பயந்தார் .அதனால் அவரின் பிணத்தை வீட்டிலேயே பெட்ரூமில் தூங்குவது போல செட்டப் செய்தார் .ஆனால் அக்கம் பக்கத்தினர் இரண்டு நாள் கழித்து அந்த வீட்டிலிருந்து துர் நாற்றம் வருவதையறிந்து அந்த பெண்ணிடம் கேட்ட போது அவர் சரியாக பதில் கூறவில்லை .அதனால் அவர்கள் அங்குள்ள காவல் நிலயத்தில் புகார் கொடுத்தனர் .போலீசார் அந்த வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்த போது அவரின் கணவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக அந்த பெண் கூறினார் .ஆனால் போலீசார் அவரிடம் விசாரித்த போது அவர் கொலை செய்த விஷயம் தெரிய வந்தது .

Contact Us