கணவன் மீதுள்ள ஆத்திரத்தில் மூன்று குழந்தைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த தாய்

 

வேலூர் மாவட்டத்தில் சலூன் பேட்டை பகுதியில் வசித்து வந்தவர்கள் தினேஷ்- ஜீவிதா தம்பதி. இந்த தம்பதிக்கு ஏழு வயதில் அக்ஷயா என்ற சிறுமியும், ஐந்து வயதில் நந்தகுமார் என்ற மகனும், ஆறு மாத கைக்குழந்தையும் இருந்துள்ளனர்.

மேஸ்திரி வேலை செய்து வந்த தினேஷுக்கும் ஜீவிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் ஜீவிதா மிகவும் மனமுடைந்து போய் இருந்திருக்கிறார். இன்றைக்கும் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.

கனவன் செயலை நினைத்து நினைத்து அவர் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார். இதனால் தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்திருக்கிறார். தற்கொலைக்கு முன்பாக தனது குழந்தைகளையும் கொன்றுவிட நினைத்திருக்கிறார். இதனால் மூன்று குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அதன் பின்னர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த அறிந்துகொண்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்து அதன் அடிப்படையில் போலீசார் நான்கு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

இந்த சம்பவத்தை அறிந்த தினேஷ் தலைமறைவாக இருக்கிறார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது.

கணவன் மனைவி சண்டையால் கணவன் மீதுள்ள ஆத்திரத்தால் பரிதாபமாக மூன்று குழந்தைகள் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் சலூன் பேட்டை பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Contact Us