அமெரிக்க பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச்சூடு; ஸ்தலத்தில் ஒருவர் பலி

 

அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் மெம்பிஸின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியானதோடு 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிஸார், இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

தொடர்ந்து பல்பொருள் அங்காடியின் உள்ளே சென்ற பொலிஸார் அங்கு துப்பாக்கிச்சூட்டிற்கு பயந்து மறைந்திருந்த பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டனர்.

மேலும் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியாக சந்தேகிக்கப்படும் நபர் இறந்துவிட்டதாக பொலிஸார் கூறுவதால், அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

Contact Us