‘எங்கே செல்லும் இந்த பாதை’ சிறையை விட்டு வெளியே வரும் மீரா மிதுன்..!

நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் சாமுக்கு ஜாமின் வழங்கியது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

நடிகை மீரா மிதுன் தாழ்த்தப்பட்ட மக்களை மிக கேவலமாக திட்டியதுடன், திரைப்பட துறையில் இருந்தே தாழ்த்தப்பட்ட சமூகத்தை வெளியேற்ற வேண்டும் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதற்கு கடுமையான கண்டங்கள் எழுந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் வன்னி அரசு சென்னை காவல் துணை ஆணையரிடம் புகார் மனு கொடுத்தார்.

அதனை தொடர்ந்து புகாரின் பேரில் சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் தலைமறைவான நிலையில் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.

அவரை தொடர்ந்து தலைமைறைவாக இருந்த மீராவின் ஆண் நண்பர் ஷாம் கைது செய்யப்பட்டு இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 35 நாட்களுக்கு மேலாக சிறை மற்றும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்ட சோர்வு ஆகிய காரணங்களுக்காக ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதனை தொடர்ந்து வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் கைது செய்யபட்ட நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் ஷாம் அபிஷேக்கு நீதிமன்றம் ஜாமீன் கொடுத்தது. இதனால் 35 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்த மீரா வெளியே வந்தார். சிறையை விட்டு மீரா மிதுன் வெளியே வரும் வீடியோ காட்சியும் வெளியாகி தற்போது வைரலாகியுள்ளது.

Contact Us