கனடாவில் இளம் மகள்களுக்கு தந்தையால் நேர்ந்த கொடூரம்: சடலமாக மீட்கப்பட்ட மூவர்

 

கனடாவின் கியூபெக் பிராந்தியத்தில் இளம் வயது மகள்கள் இருவரை கொலை செய்து தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கியூபெக் பிராந்தியத்தின் Aylmer பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. நலம் விரும்பிகள் சிலர் அளித்த தகவலின் அடிப்படையில் Gatineau பொலிசார் குடியிருப்பு ஒன்றிற்கு விசாரிக்க சென்றுள்ளனர்.

புதன்கிழமை சுமார் 2 மணியளவில் தொடர்புடைய குடியிருப்புக்கு சென்ற பொலிசார், 51 வயது நபர் ஒருவரையும் மூன்று மற்றும் 5 வயது கொண்ட இரு சிறுமிகளையும் சடலமாக மீட்டுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்ட விசாரணை அதிகாரிகள், சடலமாக மீட்கப்பட்ட இரு சிறுமிகளும் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த தந்தை தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் சிறுமிகள் மீது வன்முறை நடந்ததற்கான எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை என பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது. இதனிடையே, தற்கொலை செய்து கொண்ட அந்த நபர் Essodom Kpatcha எனவும் கொலை செய்யப்பட்ட சிறுமிகள் இருவரில் ஒருவர் Orli Kpatcha எனவும் இன்னொருவர் Liel Kpatcha எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், குடும்ப தகராறு காரணமாகவே குறித்த தந்தை மகள்களை கொலை செய்துவிட்டு தாமும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். சிற்உமிகள் இருவரும் கொல்லப்பட்ட சம்பவம் தங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Contact Us