கோடிகளின் கருப்பு பணம்: விசாரணை வட்டத்தில் இலங்கை நடிகை

 

 

ரூ.200 கோடி கருப்பு பண விவகாரத்தில் இலங்கையரும் இந்தி திரையுலகின் பிரபல நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமலாக்கத்துறையினரால் மீண்டும் விசாரிக்கப்பட உள்ளார்.

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தொடர்புடைய 200 கோடி கருப்பு பணம் விவகாரத்தில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரே முக்கிய குற்றவாளி என நிரூபணமாகியுள்ளது.

இவரின் துனைவி லீனா பால் வழியாகவே நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இவர்களின் சதி வலையில் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்த வழக்கின் ஒருபகுதியாக இதற்கு முன்னர் சுமார் 5 மணி நேரம் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை முன்னெடுத்திருந்தனர்.

ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் விளம்பரதாரர்கள் குடும்பத்தினர்களான சிவிந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங் ஆகியோரிடம் இருந்து ரூ.200 கோடி மோசடி செய்ததாக சுகேஷ் சந்திரசேகர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 24ம் திகதி சுகேஷ் சந்திரசேகருக்கு தொடர்புடைய சென்னை குடியிருப்பில் இருந்து 82.5 லட்சம் ரொக்கமும் ஒரு டசின் சொகுசு கார்களும் அமலாக்கத்துறையினரால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Contact Us