கிட்னி திருடும் சிவகார்த்திகேயன்..

 

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர், இப்படத்தில் ஜோடியாக தெலுங்கில் கேங்ஸ்டர் படத்தின் மூலம் பிரபலமான பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

இப்படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து எஸ் கே புரோடக்சன் தயாரித்துள்ளது. கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார். சமீபத்தில் கூட நடிகர் சிவகார்த்திகேயன் தனது டப்பிங் பணிகளை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.

தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார். மேலும் வருகிற மார்ச் 26-ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் டாக்டர் திரைப்படம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக சிவகார்த்திகேயன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இப்படத்தின் வெற்றியை வைத்து தான் நெல்சன் தளபதி 65 எப்படி இயக்குவார் என்பது திட்டமிட முடியும் என சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் எப்படியாவது டாக்டர் படத்தை வெற்றி பெறச் செய்து விடவேண்டும் என படத்தின் புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Contact Us