பெற்றோல் டாங்கரை திரத்தி அதனை விரட்டிச் செல்லும் ஓட்டுனர்கள்: காய்ந்த மாடு கம்பில் மேய்ந்த கதை…


பெற்றோல் டாங்கர்கள் வீதியில் செல்லும் வேளை ,அப்படியே அதனை துரத்திச் செல்வதும். அதனை பின் தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டுனர்கள், அப்படியே குறித்த பெற்றோல் நிலையத்தை முற்றுகையிட்டு வருவதும்.  பெரும் பீதியை கிளப்பி உள்ளது.  இதனால் காலை 3 மணி தொடக்கம் 5 மணிக்கு உள்ளே பெற்றோல் டிலிவரியை செய்ய நிலையங்கள் ஏற்பட்டு செய்தும். அது பலன் தரவில்லை. காலை 4 மணிக்கே இந்த கும்பல் பெற்றோல் டாங்கர்களை வீதியில் விரட்டிச் சென்று. அது செல்லும் நிலையம் முன்பாக கூடி விடுகிறார்கள். இது இவ்வாறு இருக்க பல ஸ்கூல் டீச்சர் மார், தங்கள் காரில் பெற்றோல் இல்லை என்று கூறி மட்டம் அடிக்க, மீண்டும் ஆன் -லைன் கிளாஸ் என்று சில பள்ளிகள் ஆரம்பித்து விட்டார்கள். இப்படி ஒரு கேவலமான நிலைக்கு பிரித்தானியா சென்றுள்ளது… இது அனைத்திற்கும் பொறுப்பு கூறவேண்டியது பொறிஸ் ஜோன்சன் அரசு தான்… ஏன் எனில்..

பெற்றோல் டாங்கர் ஓட்டுனர்களோடு பொறிஸ் ஜோன்சன் விட்ட சொறிச் சேட்டையே காரணம். இது நாள் வரை சுமூகமாக இருந்த வினியோகம் தடைப்பட மூல காரணமே பொறிஸ் ஜோன்சன் தான். ஓட்டுனர்கள் பலர்  SELF EMPLOYED என்று ரெஜிஸ்டர் செய்து.   வேலை செய்து வந்தார்கள். இதனால் அவர்கள் சரியாக வரி கட்டுவது இல்லை என்றும்.  வரி ஏய்ப்பு செய்வதாகவும் கூறி. ஓட்டுனர்கள் அனைவரது சுய தொழில்(Self Employment) ஐ மாற்றி. அவர்களை வேலையாட்கள் என்ற category  கீழே கொண்டு வர முனைந்தார் பொறிஸ் ஜோன்சன். இதனால் வெடித்த பூகம்பம் தான் இது. இன்று சாதாரண மக்கள் தான் அனுபவிக்கிறார்கள்.

பிரிட்டனில் உள்ள எந்த ஒரு வெள்ளை இன நபரும், டாங்கர் ஓட்டுனர்களாக வேலை செய்ய விரும்பவில்லை. மேலும் சொல்லப் போனால் பின் (குப்பை) வண்டி ஓட்ட மாட்டார்கள். குப்பை பொறுக்கும் வேலையில் இருக்க மாட்டார்கள். இது போன்ற வேலைகளை வேற்றின மக்களும் வேறு நாட்டவர்களுமே செய்து வருகிறார்கள். அவர்கள் இல்லை என்றால், பிரித்தானியா எப்படி நாறும் என்பதனை இந்த சம்பவம் நன்றாக எடுத்துக் காட்டியுள்ளது. இது நிறவெறி வெள்ளை இன மக்களுக்கு பல விடையங்களை புரியவைத்திருக்கும்.

Contact Us