“தீண்டிய உறுப்பை துண்டாக்குங்கடா” -பணக்கார பெண்ணை காதலித்தவருக்கு நேர்ந்த கதி

 

ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தவரை பெண்ணின் உறவினர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது

குஜராத்தின் பொடாட் மாவட்டத்தில் கடடா தாலுகாவில் உள்ள லிம்பாலியில் வசிக்கும் ஜெய்சுக் என்ற 25 வயது வாலிபர் அதே பகுதியில் வசிக்கும் 20 வயதான பெண்ணை காதலித்து வந்தார் .அந்த பெண்ணின் உறவினர்கள் அந்த காதலை ஏற்கவில்லை .இதனால் அந்த ஜெயசுக் அந்த பெண்ணை அந்த பெண்ணின் உறவினர்களுக்கு தெரியாமல் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் .அதன் பிறகு அந்த திருமணத்தை அந்த பெண்ணின் உறவினர்கள் ஏற்காததால் அவர்கள் தனியாக வாழ்ந்து வந்தனர் .ஆனால் அந்த பெண்ணின் சகோதரர் மற்றும் உறவினர்கள் அந்த ஜெயசுக்தான் தங்களின் சகோதரியை ஏமாற்றி கூட்டி சென்று விட்டார் என்று அவர் மீது கடுமையான் கோபத்தில் இருந்தனர் .இதனால் அவரை பழிதீர்க்க காத்திருந்தனர் .
இந்நிலையில் ஜெய்சுக் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடரியாவிலிருந்து லிம்பாலிக்குச் சென்றபோது நான்கு நபர்களால் கடத்தப்பட்டார்.அந்த நபர்கள் அவரின் காதல் மனைவியின் உறவினர்கள் ஆவார்கள் .அதன் பிறகு அவர்கள் ஜெயசுக்கை அடித்தும் ,கத்தியால் துண்டு துண்டாக வெட்டியும் ,காரை அவர் மீது ஏற்றியும் கொலை செய்து விட்டு ஓடி விட்டனர் .

பின்னர் அவரின் கொலையை பற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் .அங்கு விசாரணை நடத்தி அவரை கொலை செய்த அவரின் உறவினர்கள் மீது கொலை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

 

Contact Us