பேயும் இல்லை, பிசாசும் இல்லை – உடைந்தது மர்ம கிணற்றின் ரகசியம்

ஏமனில் உள்ள நரகத்தின் கிணறு என்றழைக்கப்படும் இயற்கையான கிணறு விலகாத மர்மங்களை கொண்டிருப்பதாக கருதப்பட்ட நிலையில் ஆராய்ச்சியாளர்கள் மர்மங்களை உடைத்தெறிந்து இது இயற்கையான கிணறு இதில் மாயமும் இல்லை மந்திரமும் இல்லை என ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்து காட்டி உள்ளனர். ஏமன் நாட்டில் உள்ள 367 அடி கிணற்றில் முதல்முறையாக ஆராய்ச்சியாளர்கள் இறங்கி சோதனை மேற்கொண்டனர். ஏமன் நாட்டில் உள்ள அல்மாரா பாலைவனத்தின் நடுவே 367 அடி ஆழமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெரிய கிணறு உள்ளது.

இதனை நரகத்தின் கிணறு என்று அப்பகுதியினர் அழைத்துவருகின்றனர். இந்தக் கிணற்றிலிருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதால் அதில் பூதம் இருப்பதாக வதந்தி பரவியது. சூரிய ஒளி கூட கிணற்றின் சில அடிகள் வரை மட்டுமே தொடுகிறது என்பதால் இருளாகவே தோன்றும் இந்த கிணற்றுக்குள் என்ன இருக்கிறது என்பது மர்மமாகவே இருந்த நிலையில் தற்போது ஆராய்ச்சியில் வெட்டவெளிச்சமாகி உள்ளது. ஏமன் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 10 பேர் முதல்முறையாக கிணற்றுக்குள் கயிறு மூலம் இறங்கி ஆய்வு மேற்கொண்டனர். பறவைகள், விலங்குகள் அதிகமாக இறந்துகிடப்பதாலேயே துர்நாற்றம் வீசுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதன் உள்ளே அழகான நீர் வீழ்ச்சி உள்ளது என கூறியுள்ளனர். பாம்புகள், பூச்சிகள் காணப்படுவதாக கூறியுள்ளனர்.

Contact Us