ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில்…. 32 பேர் பலியான சோகம்…. தகவல் வெளியிட்ட நைஜீரியா அரசு….!!

 

மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் நைஜீரியா குடியரசு அமைந்துள்ளது. தற்போது ஐ.எஸ் அமைப்பு மற்றும் போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்பினர் நைஜீரியாவில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிளர்ச்சியாளர்கள் படைகளும் நைஜீரியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதனைத் தொடர்ந்து பணத்திற்காக நைஜீரிய பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் உட்பட கால்நடை விலங்குகளையும் பயங்கரவாத அமைப்பினர் கடத்தி வருகின்றனர். இந்த கடத்தல் கும்பல்கள் நைஜீரியாவை சுற்றி பல்வேறு பகுதிகளிலும் கைவரிசையை காட்டி வருகின்றனர். தற்போது நைஜீரியாவின் சோகோடா நகரிலுள்ள கிராமம் ஒன்றில் கடத்தல் கும்பல் புகுந்துள்ளது.

இதனையடுத்து அவர்கள் கடந்த புதன்கிழமை அன்று கிராமவாசிகளின் மீது பயங்கரமான ஆயுதங்களை கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனைத் தொடர்ந்து நைஜர் பகுதியிலும் இந்த கடத்தல் கும்பல் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குறிப்பாக இந்த சம்பவத்தின்போது பெண்கள் உட்பட பலரை கடத்தல் கும்பல் கடத்திச் சென்றுள்ளது மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us