அவசரத்தில் எடுத்த முடிவு.. துபாயில் கோடீஸ்வரர்களாக மாறிய இந்திய தம்பதி..!!

 

ஹைதராபாத்தை சேர்ந்த 34 வயது நபர் மிர், கடந்த 12 வருடங்களுக்கு முன்பு துபாய்க்கு குடியேறியிருக்கிறார். இந்நிலையில் இவர் திடீரென்று அவசரமாக Dubai’s Mahzooz millionaire என்ற குலுக்கல் போட்டிக்கான நேரலை தொடங்க 5 மணிநேரங்கள் மட்டுமே இருக்கும் போது விளையாட தீர்மானித்துள்ளார்.

ஆனால், அதிர்ஷ்டவசமாக அவருக்கு, Dh1 மில்லியன் பரிசு தொகை கிடைத்திருக்கிறது. உணர்ச்சிவசத்தில் எடுத்த அவசர முடிவு அவரை கோடிஸ்வரராக்கிவிட்டது. மேலும், கடந்த இரு வாரங்களுக்கு முன் இவரின் மனைவிக்கும் மற்றொரு குலுக்கலில் Dh1,000 பரிசு கிடைத்திருக்கிறது.

இது குறித்து மிர் கூறியதாவது, நான் என் வேலையில் கவனமாக இருந்ததால், உடனே குலுக்கல் போட்டிக்கான முடிவுகளை பார்க்கவில்லை. அதற்கு மறுநாள், நான் பணியில் இருந்த சமயத்தில், எனக்கு 1 மில்லியன் திர்ஹம் பரிசு விழுந்துள்ளதாக தொலைபேசி அழைப்பில் தெரிவிக்கப்பட்டது.

நான், ஏதோ வானொலி நிலையத்திலிருந்து நக்கல் அடிக்கிறார்கள் என்று நினைத்தேன். அதன் பின்பு, அது உண்மை என்று தெரியவந்தவுடன் மகிழ்ச்சியில் திகைத்து போனேன் என்று தெரிவித்துள்ளார்.

பரிசுத் தொகையில், சேமிப்பு போக மீதியை இந்தியாவில் இருக்கும் பின்தங்கிய மாணவர்களின் கல்விக்கு வழங்கவிருப்பதாக கூறியுள்ளார்.

Contact Us