கண்டுக்காத மாணவி -காண்டான மாணவன் -எக்ஸாம் எழுதும்போது நேர்ந்த கொடுமை

 

ஒரு மாணவியை ஒரு தலையாக காதலித்த ஒரு மாணவர், அந்த மாணவியை கல்லூரியிலேயே வெட்டி கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பால செயின்ட் தாமஸ் கல்லூரியில் அபிஷேக் என்ற மாணவரும் நித்தின மோல் என்ற மாணவியும் உணவு பதப்படுத்தும் தொழில்நுட்பத்தில் BVoc UG பட்டப்படிப்பை படித்து வருகின்றனர் .இதில் மூன்றாம் ஆண்டு படிக்கும் அந்த மாணவியை , கூத்தாட்டுக்குளத்தைச் சேர்ந்த அந்த அபிஷேக் பைஜூ ஒரு தலையாக காதலித்தார் . ஆனால் அந்த பெண் அவரை காதலிக்க மறுத்து அவரை வெறுத்து ஒதுக்கியுள்ளார் .இதனால் அந்த பைஜூ பலமுறை அவரிடம் சென்று தன்னுடைய காதலை வெளிப்படுத்தியும் அவர் கண்டுகொள்ளாததில் அவர் காண்டானார்

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை, அபிஷேக் மற்றும் நித்தின மோல் ஆகியோர் மற்ற மாணவர்களோடு அந்த பட்டப்படிப்பின் இறுதி செமஸ்டர் தேர்வுக்கு அந்த கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர் .அப்போது அந்த கல்லூரி வளாகத்தில் யாரும் எதிர்பாரவிதமாக அந்த பைஜூ அங்கிருந்த ஒரு பேப்பர் கட்டரை எடுத்து அந்த நித்தின மோளை வெட்டி தள்ளினார் .இதில் அந்த மாணவி அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார் .


பின்னர் மற்ற மாணவர்கள் அந்த மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது அவர் உயிரிழந்தார் ,அதன் பிறகு அங்கிருந்து தப்பியோட முயன்ற அந்த பைஜூவை பிடித்து அங்குள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் .போலீசார் அந்த மாணவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Contact Us