ஏலாக் கட்டத்தில் ஆர்மி களத்தில் இறங்கியது: BP நிலையங்களில் இருந்து டாங்கர் லாரிகள் இயங்கும் என அறிவிப்பு !

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பெற்றோல் தட்டுப்பாட்டால் மக்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. உணவுச் சங்கிலியும் சேர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் உணவுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும் என்று, எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில். 200 பிரித்தானிய ராணுவத்தினர் உடனடியாக களத்தில் இறக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் நேற்று(01) ஹமல் ஹாம்ஸ்ட்டடில் உள்ள BP எண்ணை சுத்திகரிப்பு நிலையத்திற்கு சென்று, அங்குள்ள டாங்கர்களை ஓட ஆரம்பித்துள்ளார்கள். முதலில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு பெற்றோலை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஏனைய இடங்களுக்கு பெற்றோல் வினியோகம் ஆரம்பமாகும். ஆனால் இந்த பற்றாக் குறை வெறும் 200 ராணுவத்தினரை வைத்து சமாளிக்க கூடியது அல்ல என்பது யாவரும் அறிந்த விடையம்.

Contact Us