லண்டன் பண்ணை வீட்டில் சாரா.. நீச்சல் குளத்தில் மிதந்த உடல்பாகங்கள்.. கிலியை கிளப்பிய பெண் மரணம்..

தெற்கு லண்டனில் பிரிஸ்டன் பகுதியில் வசித்து வந்தவர் சாரா… 33 வயதாகிறது.. மார்க்கெட்டிங் நிர்வாகியாக வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி மாலை, நண்பரை சந்திக்க சென்றார். பிறகு அன்று இரவு 9 மணியளவில் நண்பரை சந்தித்துவிட்டு தன் வீட்டிற்கு கிளம்பினார்.. வரும் வழியில் எல்லாம், அதே நண்பருடன் செல்போனில் பேசி கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென செல்போனில் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.. அவ்வளவு நேரம் நன்றாக பேசி கொண்டிருந்த நிலையில், இணைப்பு ஏன் திடீரென துண்டிக்கப்பட வேண்டும்? சாராவிற்கு என்ன ஆச்சோ என்று அந்த நண்பர் அதிர்ச்சி அடைந்து, கடைசியில் போலீசில் புகார் தந்தார். அதன்பேரில் போலீசாரும் விசாரணையை துவங்கினர். இது தான் நடந்தது. ஆனால் அதன் பின் ஒன்றன் பின் ஒன்றாக வந்த தகவல், முழு பிரித்தானியாவையும் கிலி கொள்ள வைத்தது. உண்மையில் என்ன நடந்தது வாருங்கள் பார்கலாம்…

சோஷியல் மீடியாக்களிலும் சாரா மாயமானது பகிரப்பட்டது.. இதனால் அந்த நகரமெங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. எங்கெங்கோ தேடியலைந்த நிலையில், ஒரு வாரம் கழித்துதான் சாராவின் சடலம் கிடைத்தது.. அவர் காணாமல் போன இடத்தில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் உள்ள கென்ட் நகருக்கு அருகே சாரா பிணமாக கிடந்தார்.. அது ஒரு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி. அங்கிருந்த குளத்தில் சாராவின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அப்போதுதான் வழக்கை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தினர்.. சாரா காணாமல் போன இடத்தில் இருந்த சிசிடிவி காட்சியை முதலில் ஆய்வு செய்தனர்.. அப்போது, வேன் கூசன்ஸ் என்பவர்தான் இதில் சம்பந்தப்பட்டவர் என்பதை பார்த்து போலீசார் அதிர்ந்து போய்விட்டனர்.

காரணம், அவரும் ஒரு போலீஸ் அதிகாரி ஆவார்.. 48 வயதாகிறது. சிசிடிவி காட்சியின் ஆதாரத்தை வைத்து, சாரா பற்றி கேட்டதற்கு, முதலில் றொமேனிய நாட்டவர்கள் சாராவை பிடித்து தரும்படி கேட்டார்கள் அதனால் நான் கைது செய்து அவர்களிடம் கொடுத்தேன் என்று மழுப்பினார் கூசன்ஸ். சம்பவம் தினத்தன்று சாரா தனது நண்பரோடு பேசிக்கொண்டு நடந்து சென்று கொண்டு இருந்தார். அங்கே காரில் வந்த கூசன்ஸ், கொரோனா நேரத்தில் எப்படி இப்படி நடந்து செல்ல முடியும் என்று கேள்வி கேட்டு. அவரை முதலில் கைது செய்து தனது பொலிஸ் காரில் அடைத்துள்ளார். பின்னர் அவரை கற்பழித்து விட்டு. கொலை செய்ததோடு. சாராவை கொல்ல முன்னர் மக் டெனால்ஸ் சென்று உணவு வாங்கியும் உள்ளார். கைகள் கட்டப்பட்ட நிலையில் சாராவை மக் டெனால்ஸ்சில் வேலை செய்யும் நபர் பார்த்தும் உள்ளார். ஆனால் அவர் சந்தேகம் கொள்ளவில்லை. ஏன் எனில் கூசன்ஸ் ஒரு பொலிஸ் அதிகாரி என்பது அவருக்கு ஏற்கனவே தெரியும்.

இன் நிலையில் சாராவை கொலை செய்து விட்டு. பிரிஜ்ஜில் அவர் உடலை வைத்து விட்டு. சாவகாசமாக செயின்ஸ் பெரி சென்று பிளக் பாக் (பின் பாக்) வாங்கி உள்ளார். உடலை வெட்ட ஏதுவான பொருட்களையும் வாங்கிச் சென்றுள்ளார் கூசன்ஸ். என்ன கொடுமை. அவருக்கு எந்த ஒரு பதற்றமும் இருக்கவில்லை. பின்னர் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி, 80 மைல் கடந்து சென்று பிரேதத்தை போட்டுள்ளார். ஆனால் அதனை அவ்வளவு சீக்கிரம் பொலிசார் கண்டு பிடிப்பார்கள் என்பதானை தான் அவர் சற்றும் எதிர்பார்கவில்லை. இன் நிலையில், அவரது வழக்கு நீதிமன்றில் வந்து தீர்ப்பும் கிடைத்துள்ளது. ஆயுட் காலம் வரை அவர் சிறியில் இருக்க வேண்டிய தீர்ப்பை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையம்.

Contact Us