உள்ளாடை விளம்பரத்தால் சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா வீடியோ.. யோகா டீச்சர் பண்ற வேலையா இது.!

தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழில் இவர் நடித்த சுல்தான் மற்றும் கீதாகோவிந்தம் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

நடிகைகள் விளம்பரத்தில் நடிப்பது ஒன்றும் புதிதல்ல. இந்நிலையில் ஆண்கள் உள்ளாடை விளம்பரத்தில் நடிகர் விக்கி கௌஷலின் நடித்து ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார் ராஷ்மிகா.

இந்த விளம்பரத்தில் யோகா டீச்சராக வரும் ராஷ்மிகா மந்தனா விக்கி கௌஷலின் உள்ளாடையை பார்த்து கவரப்படுவதாக காட்சிகள் வரும். இதுபோன்ற மோசமான விளம்பரத்தில் நடித்துள்ளதால் ராஷ்மிகாவின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி நீங்கள் ஒரு நடிகையாக இருந்து கொண்டு இந்த மாதிரி விளம்பரங்களில் நடிப்பது நியாயமற்றது என்றும், இந்த மாதிரி மோசமான விளம்பரங்களைப் பார்த்தால் எந்த பெண்ணும் சந்தோசப்பட மாட்டார்கள் என்றும் ஆவேசமாக பேசியுள்ளனர்.

ராஷ்மிகா மந்தனா மற்றும் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகவிருக்கும் திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் ராஷ்மிகாவின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இந்த மோசமான விளம்பரத்தை பார்த்த ரசிகர்கள் ராஸ்மிகாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Contact Us