படத்தை போன்றே போதைப் பொருள் கடத்தல்: ‘சிங்கம் 2’ நடிகர் கைது,அன்றே கணித்தார் சூர்யா!

சிங்கம் 2 திரைப்படத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனின் கூட்டாளியாக நடித்திருந்த நைஜீரியாவைச் சேர்ந்த நடிகர் செக்வுமே மால்வின் கைது செய்யப்பட்டுள்ளார்

இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த படம் சிங்கம். மொத்தம் 3 பாகங்களை கொண்ட இப்படத்தில் துரை சிங்கமாக நடித்த சூர்யா, போதைப் பொருள் கடத்தல், ரவுடிகளை ஓட விடுவது, சட்டத்துக்கு புறம்பான தொழில்களை ஒடுக்கும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிந்திருந்தார்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் எடுக்கப்பட்டது. போதை பொருள் கடத்தல் தொடர்பான இந்த பாகத்தில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக டேனி சபானி நடித்திருப்பார். அவரது கூட்டாளியாக நைஜீரியாவைச் சேர்ந்த செக்வுமே மால்வின் நடித்திருப்பார்.

சிங்கம் 2 படத்தை தொடர்ந்து, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் செக்வுமே மால்வின் நடித்துள்ளார். மேலும் பெங்களூருவில் தங்கி பல்வேறு படங்களில் நடித்து வந்துள்ளார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் போதைப் பொருள் கும்பல் ஒன்றைக் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் செக்வுமே மால்வின் தொடர்பான தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

அதனடிப்படையில், போலீசார் செக்வுமே மால்வின் வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் ரூ.8 லட்சம் மதிப்புள்ள போதை பொருள், ரூ.5000 ரொக்கம், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். நடிப்பின் மூலம் போதிய வருமனாம் கிடைக்காததால், தனக்கு இருந்த தொடர்புகளைப் பயன்படுத்தி போதைப் பொருட்களைக் கடத்தி இவர் விநியோகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சிங்கம் 2 படத்தில் நடித்தது போன்று நிஜத்திலும் போதை பொருள் கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us