20 வயது தலித் பெண் உயிரிழப்பு -டாக்டரும் பாலியல் வன்கொடுமை செய்தவனும் கைது

 

கட்டாய கருக்கலைப்பில் 20வயது தலித் பெண் உயிரிழந்த வழக்கில் டாக்டரும் பாலியல் வன்கொடுமை செய்தவனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  உத்திரபிரதேச மாநிலத்தில் ஹமிர்புர் மாவட்டம் மஹோபா ஊரில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வயல்வெளிக்கு சென்ற 20வயது தலித் பெண்ணை சைலேந்தர் சிங் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.  இதை அந்த சிறுமி வீட்டனிரமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

இதனால் செப்டம்பர் 25ம் தேதி அன்று அப்பெண்ணுக்கு ரத்தப்போக்கு இருந்துள்ளது.  இதையடுத்து மருத்துவமனை சென்றபோது,  அப்பெண் கருதரித்து இருந்தது தெரியவந்துள்ளது.

இந்த தகவல் அறிந்த சைலேந்தர்சிங் அப்பெண்ணை தனியார் மருத்துமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார். அந்த கருவை கலைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். கரு கலைக்கப்பட்ட மறுநாளே அப்பெண் உயிரிழந்திருக்கிறார். இந்த தகவல் வெளியே தெரியாமல் பார்த்துக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆறு மாதங்களுக்கு பின்னர் தற்போது இந்த தகவல் பரவியிருக்கிறது. இதையடுத்து குற்றவாளிகளான பெண்னை பாலியல் வன்கொடுமை செய்த சைலேந்திரசிங், ராம் நரேன் நரேன், மாம சிவ் நரேன் ஆகுயோருக்கு எதிராக நேற்று தினம் மாலையில் கைது
துபட்டனர்.

Contact Us