நாஜி கொலை முகாமின் முன்னாள் செயலாளர்…. தலைமறைவானதால் பரபரப்பு…. கோபத்தில் பிரபல நாட்டு மக்கள்….!!

 

ஜெர்மன் நாட்டை சேர்ந்த 96 வயதான இர்ம்கார்ட் ஃபுர்ச்னர் இரண்டாம் உலகப் போரின் போது நாஜி கொலை முகாமில் செயலாளராக பணிபுரிந்துள்ளார். மேலும் 11,000 பேரின் கொலைக்கு இவர் உடந்தையாக இருந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிய இர்ம்கார்ட் ஃபுர்ச்னர், நேற்று அதிகாலை 6-7 மணியளவில் அவர் தங்கியிருந்த முதியோர் காப்பகத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் நீதிமன்றத்தில் சரண் அடையாத ஃபுர்ச்னரை கண்டுபிடித்து கைது செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து போலீசார் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். தற்போது கடந்த வியாழக்கிழமை அன்று Hamburg நகரில் இர்ம்கார்ட் ஃபுர்ச்னரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து அடுத்த முறை ஃபுர்ச்னரை நீதிமன்றத்தில் சரண் செய்யும் வரை அவரை போலீஸ் காவலில் அடைத்து வைத்துள்ளனர்.

Contact Us